வவுனியா- நெடுங்கேணி பிரதேசத்தில்  தனியார் ஒப்பந்த நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதால்,அவர்கள் மூவரும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, வவுனியா பொது சுகாதார பரிசோதகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த நிறுவனத்தில்  பணிபுரியும் 25 பேருக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டதையடுத்தே, குறித்த மூவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, குறித்த ஒப்பந்த நிறுவனத்தால் தொடர்புடைய  வவுனியா- வேப்பம்குளம் பிரதேசத்தில்  கொடுக்கல் வாங்கல் செய்துள்ள  3 வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.