மலர்வு – 1951.12.18 உதிர்வு – 2020.10.22
கண்டியைப் பிறப்பிடமாகவும், இல:36, அண்ணாவீதி, பண்டாரிகுளம், வவுனியாவை வாழ்விடமாகவும் கொண்ட திரு. வைத்திலிங்கம் பாலச்சந்திரன்
அவர்கள் இன்று (22.10.2020) வியாழக்கிழமை காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய (புளொட்) நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம். இனப்பற்றும், தமிழ் பற்றும் மிக்க இவர் ஆரம்ப காலங்களில் காந்தீயம் அமைப்பில் இணைந்து செயற்பட்டு வந்தார்.
முதன்முதலில் வவுனியாவில் மலையக மக்களின் பிரதிநிதியாக எமது கட்சியின் சார்பில் 1994 நகரசபை தேர்தலில் போட்டியிட்டு நகரசபையின் உபதலைவரானார்.
தொடர்ந்து நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டதோடு வவுனியாவில் பல்வேறு அபிவிருத்திப்பணிகளையும் மேற்கொண்டிருந்தார். அத்துடன் இவர் எமது கட்சியின் உபதலைவர்களுள் ஒருவராகவும் இருந்தார்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர் நண்பர்களுடன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந் துயரினைப் பகிர்ந்து கொண்டு எமது அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
குறிப்பு: அன்னாரின் பூதவுடல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் (24.10.2020) சனிக்கிழமை காலை இறுதிக் கிரியைகள் இடம்பெற்று காலை 11.00 மணியளவில் பூதவுடல் தோணிக்கல் பொது மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.
தொடர்புகட்கு: பாபு (0773680417)