கம்பஹா மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளமையால், இந்தப் பிரதேச மக்களுக்கான ஊரடங்கு அனுமதிப்பத்திரமும் குறித்த பிரதேசங்களில் தொழிற்சாலைகளை நடத்துவதற்கான அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்வது தொடர்பான விசாரணைகளுக்காக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் நால்வர் இணைக்கப்பட்டுள்ளனரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்துக்குப் ​பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரால் இவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, களணி பொலிஸ் பிரிவு- 071 859 16 05 , கம்பஹா பொலிஸ் பிரிவு- 071 859 16 10 , நீர்கொழும்பு பொலிஸ் பிரிவு- 071 859 16 32 , கொழும்பு வடக்கு பொலிஸ் பிரிவு-071 859 15 74​ ஆகிய இலக்கங்களை அழைத்து தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் ​தெரிவித்துள்ளார்.

அத்துடன் திருமண நிகழ்வுகள் மற்றும் ஏனைய நிகழ்வுகளை நடத்துவது குறித்தும் இந்த தொலைபேசி இலக்கங்கள் ஊடாகத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.