20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவுபெற்றுள்ளது.20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

213 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நசீர் அஹமட், பைசல் காசிம், M.S. தௌபிக் ஆகியோர் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் இஷாக் ரஹ்மான், டயானா கமகே ஆகியோரும் இரண்டாவது திருத்தம் மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்தனர்.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் உறுப்பினர் அருணாச்சலம் அரவிந்தகுமார், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி ஷப்ரி ரஹீம் ஆகியோரும் ஆதரவாக வாக்களித்தனர்.

எவ்வாறாயினும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன், அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் முதுநபீன் ஆகியோர் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்தனர்.

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமும் எதிராக வாக்கினை பதிவு செய்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகியவற்றின் உறுப்பினர்கள் திருத்தத்திற்கு எதிராக வாக்களித்தனர்.

இரண்டாவது வாசிப்பு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட நிலையில், குழு நிலை சந்தர்ப்பத்தில் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.