கொழும்பு துறைமுகத்தில் கடமையாற்றும் சுங்க அதிகாரிகள் 45 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.கொரோனா நோயாளர்கள் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டமையால், 45 அதிகாரிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன குறிப்பிட்டார்.

இதேவேளை, கொழும்பு துறைமுகத்தின் 200 ஊழியர்களுக்கு PCR சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, காலி தபால் நிலையத்தின் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கொரோனா நோயாளர் ஒருவர் தபால் நிலையத்திற்கு சென்றமையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது