எமது கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வவுனியா நகரசபை உபதலைவரும், கட்சியின் முன்னாள் உபதலைவருமான அமரர் வைத்திலிங்கம் பாலச்சந்திரன்
அவர்களின் இறுதி நிகழ்வுகள் இன்று (24.10.2020) சனிக்கிழமை முற்பகல் இல:36, அண்ணாவீதி, பண்டாரிகுளம், வவுனியாவில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்றது. ஞஇறுதி நிகழ்வில் புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன்,

ரெலோ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகராதலிங்கம், கோவிந்தன் கருணாகரம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் பொருளாளர் க.சிவநேசன், உப தலைவர்கள் ஜி.ரி லிங்கநாதன், வி.ராகவன், கட்சியின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் க.சந்திரகுலசிங்கம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன், செ.மயுரன், கட்சியின் மன்னார், கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர்கள், கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள், கட்சியின் நகரசபை, பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள், பொது மக்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டனர்.