கிளிநொச்சி – தர்மபுரம் கிழக்கு பதினோராம் யூனிட் பகுதியில் நேற்றைய தினம் (23) திருமண விழாவிற்கு வருகை தந்த பாடசாலை மாணவன் ஒருவன் பாதுகாப்பற்ற கிற்றில் விழுந்து உயிரிழந்துள்ளான்.திருமண நிகழ்வுக்கு தர்மபுரம் கட்டைக்காடு பகுதியில் இருந்து திருமண நிகழ்வுக்கு வருகை தந்த மாணவன் நேற்றைய தினம் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் குறித்த மாணவனை தேடியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த மாணவன் இன்றைய தினம் (24) திருமண நிகழ்வு நடந்த வீட்டில் பாதுகாப்பற்ற கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தர்மபுரம் மகாவித்தியாலயத்தில் வர்த்தக பிரிவில் கல்வி கற்ற மேகநாதன் தர்ஷன் (18-வயது) எனும் மாணவனே உயிரிழந்துள்ளான்.