கிழக்கு மாகாணத்தில் இதுவரை 27 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாெக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தில் இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதனடிப்படி பேலியகொடை கொத்தணி தொடர்பால் திருகோணமலை மாவட்டத்தில் 06 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 பேரும் கல்முனை பிராந்தியத்தில் 09 பேரும் வேறு வழிமுறையில் தொற்றுக்குள்ளான ஒருவரும் என 27 பேருக்கு தொற்று உறுதியானது எனவும் தெரிவித்தார்.