இலங்கையில் 15 ஆவது கொரோனா தொற்று நோயாளியின் மரணம் இன்று (24) காலை பதிவாகியுள்ளது.இவர் 56 வயதான ஆண் நோயாளி ஆவதுடன் குளியாப்பிட்டி, உனலீய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

இவர் குளியாப்பிட்டி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் இருதய நோயாளர் என தெரிவிக்கப்படுகிறது.

அதற்காக சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக கடந்த 14 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 16 ஆம் திகதி அவரின் நோய் நிலைமை தீவிரமானதால் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிக்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக குளியாப்பிட்டி வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் பிரஹாத் வேரவத்த தெரிவித்தார்.