வவுனியா – நெடுங்கேணியில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் அங்கு மொத்த தொற்றாறர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.நெடுங்கேணியில் கட்டட நிர்மாண நிறுவனமொன்றின் ஊடாக வீதி அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டுவந்த ஏழு பேருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவர்களில் தென்மராட்சி சரசாலையைச் சேர்ந்த ஒருவர், வடமராட்சி வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஒருவர், கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவர் என வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மூவருக்கு தொற்று இனங்காணப்பட்டுள்ளது. அதேவேளை ஏனையவர்கள் அம்பாந்தோட்டை, மாத்தறை, பலாங்கொட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்திப் பணியில் ஈடுபடும் ஊழியர்களில் முதல் தடவையாக கொரோனா பரிசோதனை செய்தபோது மூவருக்கு தொற்று கண்டறியப்பட்டது. பின்னர் மேலும் இருவர் உட்பட ஒன்பது பேருக்கு தொற்று உறுதியாகியிருந்தது.