கம்பஹா மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதேவேளை, நாளை (26) காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை வர்த்தக நிலையங்கள் மற்றும் மருந்தகங்களை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.