பிரதமர் பாதுகாப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இருப்பினும் அவர் 17 ஆம் திகதிக்கு பின்னர் சேவைக்கு சமூகமளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மிரிஹான பொலிஸ் நிலையத்தின் சிற்றூண்டிச்சாலையில் கடமையாற்றிய பொலிஸ் அதிகாரி ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அதிகாரி பேலியகொட மீன் விற்பனை சந்தைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.