கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கத்தையடுத்து வாழைச்சேனை மற்றும் பொத்துவில் பிரதேசங்களில் சுயதனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ளது.ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இடங்களில் இராணுவத்தினர் பொலிஸாரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பிரதானவீதிகள்   வெறிச்சோடிக்காணப்படுகின்றன.

வாழைச்சேனையில் 27 பேரும் பொத்துவிலில் 5 பேரும் கொரோனா வைரஸ்  தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொற்றாளர்களாக இனங்காணப்பட்டவர்கள் கரடியானறு கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை,  அவர்களது குடும்பத்தினர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

அங்குள்ள பொதுசந்தைகள் மறுஅறிவித்தல்வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்தில் வேறு எந்தப் பகுதியிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.