மஹரகம நகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் 15 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளரென மஹரகம சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.இதற்கமைய, நாகஹவத்த, பன்னிப்பிட்டிய, வீரமாவத்த, பதிரகொட, ஜனதா மாவத்த,நாவின்ன, எரவ்வல, எம்புல்தெனிய மற்றும் ஜயகத் வீதி ஆகிய பிரதேசதங்களைச் சேர்ந்த 15 பேரே இவ்வாறு தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இவ்வாறு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் பேலியாகொட மீன்சந்தை கொத்தணி மற்றும் துறைமுக கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.