பாணந்துறை நகர சபைக்குட்பட்ட பிரதேசத்தின் 6 வீதிகளிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென, பாணந்துறை நகர  சபை தவிசாளர் நந்தன குணதிலக தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, ஆதர் வீ. தியெஸ் மாவத்தை, ஜனப்பிரிய மாவத்தை, சந்தை வீதி, தர்மசாலாவ வீதி, விஜேசூரிய மாவத்தை, ஜயதிலக மாவத்தை ஆகிய வீதிகளிலுள்ள வர்த்தக நிலையங்களே தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.