கொரோனா தொற்று நாட்டில் பரவி வருவதைக் கருத்திற்கொண்டு, இலங்கைக்கு வருகைத் தந்து மீண்டும் தத்தமது நாடுகளுக்கு செல்ல முடியாமல் இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களின் வீசா காலத்தை நீடிக்க குடிவரவு- குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, 2020 செப்டம்பர் 7ஆம் திகதி தொடக்கம் 2020 டிசெம்பர் 5ஆம் திகதி இது நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த வீசா நீடிப்புடன் தொடர்புடைய கட்டணங்களைச் செலுத்துதல் மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து, காலகிரமத்தில் அறிவிக்கப்படும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் இலங்கையிலிருந்து வெளியேற விரும்பும் வெளிநாட்டவர்கள் மேற்குறிப்பிட்ட வீசா நீடிப்புடன் தொடர்புடைய கட்டணத்தை விமான நிலையத்தில் செலுத்தி, வெளியேறலாம் என்றும் அறிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களை 070-7101050 என்ற ​அலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு, அறியலாம் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது