நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 8870 ஆக அதிகரித்துள்ளது.நேற்றைய தினம் 457 பேருக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுவரை 4043 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

4808 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.

கொரோனா தொற்றினால் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்குள்ளான மூவர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்தனர்.

ஜா-எல பகுதியைச் சேர்ந்த 42 வயதான ஆண் ஒருவர் , நீண்டகாலம் நோய்வாய்ப்பட்டிருந்த கொழும்பைச் சேர்ந்த 19 வயதான நபர் மற்றும் 87 வயதான பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் கொரோனா தொற்றினால் நேற்று உயிரிழந்தனர்