நாளை (29) நள்ளிரவு 12 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (02) அதிகாலை 05 மணி வரை மேல் மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.ஏனைய பகுதிகளில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என இராணுவத் தளபதி கூறினார்.