கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய நிலையம் மூன்று சுய தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளை அடையாளப்படுத்தியுள்ளது.அதற்கமைய, தொற்றாளருடன் தொடர்புடையவர்கள் தமது வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

அவர்களின் தனிமைப்படுத்தல் பல்வேறு கட்டங்களில் கண்காணிக்கப்படும்.

காலை 06 மணி தொடக்கம் 11 மணிவரை குறித்த பிரதேசத்தில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் கண்காணிப்பர்.

முற்பகல் 11 மணியிலிருந்து மாலை 4 மணிவரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸாரால் கண்காணிக்கப்படுவார்கள்.

மாலை நான்கு மணியிலிருந்து மறுநாள் காலை 06 மணிவரை குறித்த பிரதேசத்தின் அதிகாரத்துக்குட்பட்ட எந்தவொரு முப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகளால் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

யாராவது தனிமைப்படுத்தலை மீறினால் பிரதேசத்தின் பிரதான பொதுச்சுகாதார பரிசோதகரின் அறிவுறுத்தலின்பிரகாரம் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச்செல்லப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.