நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று  பரவலால், மீண்டும் அறிவிக்கும் வரை, நுவரெலியாவுக்கு சுற்றுலாப் பயணங்கள் வருவதைத் தவிர்க்குமாறு, நுவரெலியா மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர்.புஸ்பகுமார வேண்டுகோள் விடுத்துள்ளார்.இன்று (29) ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்த வேண்டுகோளை மீறி வருபவர்களுக்கு தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.