இலங்கையில் இதுவரையில் 9,205 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நேற்றைய தினம் 335 பேர் புதிதாக இனங்காணப்பட்டதை அடுத்து இந்த தொகை அதிகரித்துள்ளது.

அவர்களுள் 308 பேர் பேலியகொட மற்றும் மினுவங்கொட கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனிமைப்படுத்தலில் இருந்த 27 பேரும் அவர்களுள் உள்ளடங்குதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் 4,075 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் 5,111 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று (28) காலை வரையில் மினுவங்கொட கொரோனா கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5,730 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களுள் 1,041 பேர் ஆடை கைத்தொழிற்சாலை ஊழியர்கள் என்பதுடன் ஏனைய அனைவரும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.