மட்டக்களப்பில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.லதாகரன் தெரிவித்துள்ளார்.இதன்படி கிழக்கு மாகாணத்தில் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது.

பேலியகொடை மீன் சந்தைக்கு சென்று திரும்பிய ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவருடன் தொடர்புபட்டிருந்த மற்றுமொருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும்,

கொழும்பிலிருந்து பட்டிப்பளைக்கு சென்றிருந்த நிலையில் நோய் அறிகுறிகள் காணப்பட்டமையால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இன்னொருவரும் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் லதாகரன் தெரிவித்தார்.