அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பாரிய இடி மின்னலில் திருக்கோவில் பிரதேச விநாயகபுரத்தை சேர்ந்த கணவனும் மனைவியும் பலியாகியுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று (30) மாலை 6 மணியளவில் இடம்பெற்றது.

விநாயகபுரம் தபாலக வீதியைச் சேர்ந்த 46 வயதுடைய லோகநாயகம் யோகேஸ்வரன் மற்றும் அவரது மனைவி காசிப்பிள்ளை ஜெயசுதா (வயது 46) ஆகிய தம்பதிகளே இவ்விதம் மின்னல்தாக்கி பரிதாபகரமாக பலியானவர்களாவார்.

சடலம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மாலை 6 மணிமுதல் மாவட்டமெங்கும் பாரிய இடி மின்னலுடன் கனமழை பொழிந்தமை குறிப்பிடத்தக்கது.