நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 11,060 ஆக அதிகரித்துள்ளது.நேற்றைய தினம் (01) 397 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திவுலப்பிட்டிய மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணிகளிலிருந்து இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில் கொரோனா கொத்தணியிலிருந்து பதிவாகியுள்ள நோயாளர்களின் எண்ணிக்கை 7582 ஆக உயர்வடைந்துள்ளது.

வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டோரில் 6134 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்றைய தினம் 506 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் இதுவரை 4905 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளன