திருகோணமலை பொது வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.நேரம் விடுமுறைக்கு சென்று வைத்தியசாலைக்கு திரும்பிய வைத்தியருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டதாக வைத்தியசாலையின் பணிப்பாளர், டொக்டர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார்.

குறித்த வைத்தியருடன் தங்கியிருந்த மற்றுமொரு வைத்தியருக்கும் PCR பரிசோதனை மேற்கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஏற்கனவே தொற்று உறுதிப்படுத்தப்பட்ட வைத்தியர் எவருக்கும் சிகிச்சையளிக்காத போதிலும்  அவருடன் தங்கியிருந்த வைத்தியர், சில நோயாளர் விடுதிகளுக்கு சென்றுள்ளதால் அங்குள்ள ஊழியர்களுக்கும் நோயாளர்களுக்கும் பரிசோதனைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.