03ஆம் தவணைக்காக எதிர்வரும் 09ஆம் திகதி பாடசாலைகளை திறப்பது தொடர்பில் இறுதியான தீர்மானத்தை இந்த வார இறுதியில் மேற்கொள்ள எதிர்ப்பார்த்துள்ளதாக கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (02) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அத்துடன், ஆழ்ந்த ஆய்வுக்குப் பின்னர் பாடசாலைகளை தொடங்குவதற்கான இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மாணவர்களின் ஆரோக்கியம் மிக முக்கியமான காரணி என்பதையும் அவர் வலியுறுத்தினார்.