நேற்றைய தினம் புதிதாக இனங்காணப்பட்ட 275 கொரோனா தொற்றாளர்களுள் 90 பேர் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.அவர்களுள் 34 பேர் மஹர பகுதியையும் 18 பேர் பியகம பகுதியையும் மற்றும் 16 பேர் களனி பகுதியையும் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் கம்பஹா பகுதியில் 9 ​பேரும், கந்தான பகுதியில் 2 பேரும், வத்தள பகுதியில் 3 பேரும், பேலியகொட பகுதியில் 3 பேரும், ராகம மற்றும் கடவத்த பகுதிகளில் தலா 2 பேரும், மினுவங்கொட பகுதியில் ஒருவரும் இனங்காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் நேற்று இனங்காணப்பட்டவர்களுள் 61 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை களுத்துறை, காலி, கேகாலை, குருணாகல், இரத்தினபுரி மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் நேற்றை தினம் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.