மேல் மாகாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான பொலிஸாரின் எண்ணிக்கை 180ஆக அதிகரித்துள்ளது.அத்துடன் 257 பொலிஸார் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனரென்றும் 1,302 பொலிஸார் சுயதனிமையில் இருப்பதாகவும் மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சுங்கத் திணைக்களத்தின் 8 அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதென, சுங்க பணிப்பாளர் நாயகம் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.