கொழும்பு மாவட்டத்தில் இதுவரையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகசுகாதாரப் பிரிவினர் எமக்கு தகவல் வழங்கியுள்ளனர் என்று கொழும்பு மாவட்ட பிரதேச செயலாளர் பிரதீப் யசரட்ன இன்று தெரிவித்தார்.

இதேபோன்று தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கும் மேல் என தெரிவிக்கப்பட்டது இதற்கமைவாக கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்ப அங்கத்தவர் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் மேல் என குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

COVID-19 வைரஸ் தொற்றின் காரணமாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவதற்காக அரசாங்கத்தினால் எனக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. தொற்றினால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு இரண்டு வார காலத்திற்கு நிவாரணத்தை வழங்குவதற்காகவே இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மேலாக பிரதமர் அலுவலகத்தின் மூலம் எமக்கு சுற்றறிக்கை ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதற்கமைவாக அனைத்து குடும்பங்களுக்கும் இந்த நிவாரண உதவியை வழங்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கையை கவனத்தில் கொள்ளாது ஒரு குடும்பத்திற்கு இரண்டு வாரங்களுக்கு தேவையான அத்தியாவசிய உலர் உணவுப்பொருட்கள் அடங்கிய பொதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைவாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட குடும்பங்களை அடையாளம் கண்டு உலர் உணவுப்பொருட்களை வழங்குமாறு 13 பிரதேச செயலாளர்களுக்கும் நாம் ஆலோசனை வழங்கியுள்ளோம்.

இவர்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருட்கள் அதாவது இரண்டு வாரங்களுக்கு போதுமான ரூபா 10,000/= பெறுமதியான பொருட்களை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம்;. இதற்கமைவாக அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைய இந்த வேலைத்திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

சில சந்தர்ப்பத்தில் ஒரு வீட்டில் இரண்டு குடும்பங்களுக்கு மேல் வசிப்பார்களாயின் கிராம கிராம உத்தியோகத்தவர் மூலம் அது தொடர்பாக உறுதிப்படுத்தப்படவேண்டும் அவர்களுக்கு தனித்தனியாக உணவு பொருள் பொதி வழங்கப்படும்.

சுகாதார அதிகாரி அல்லது இந்த தனிமைப்படுத்தல் குடும்பங்களின் நலன்களைப் பேணுவதற்காக ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலும் ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர் அடிக்கடி உங்களது வீட்டுக்கு அருகில் காணப்படுவார். அவருடன் தொடர்பு கொண்டு இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் இந்த அதிகாரிக்கு இதுதொடர்பான தகவலை வழங்கினால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் இடத்திற்கே வந்து தகவல்களைப் பெற்றுக் கொள்வார்.; அப்படியும் இல்லாதபட்சத்தில் இதற்கென உள்ள தொலைபேசி இலக்கத்தின் ஊடாக கொழும்பு பிரதேச செயலகத்துடன் தொடர்பு கொண்டு உங்களது உலர் உணவுப் பொதியை பெற்றுக் கொள்ள முடியும்.

அதற்கான தொலைபேசி இலக்கம் வருமாறு 011 236 9139 பிரதேச செயலாளர் இது தொடர்பாக அதற்கான நடவடிக்கையை மேற்கொள்வார்என்று கொழும்பு மாவட்ட பிரதேச செயலாளர் பிரதீப் யசரட்ன மேலும் தெரிவித்தார்.