கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் இதுவரை 32 கொவிட்-19 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஜி.ஜயசூரிய தெரிவித்தார்.அவர்களில் 20 பேர் சிறுவர்கள் எனவும் 12 பேர் கர்ப்பிணிகள் எனவும் அவர் தெரிவித்தார்.

அதைப்போல் வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவருக்கும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
K
எவ்வாறாயினும் வைத்தியருக்கு தொற்று குறித்த வைத்தியசாலையில் வைத்து ஏற்படவில்லை என அவர் மேலும் கூறினார்.

இந்த நிலைமை காரணமாக சிகிச்சை பெற்றுவதற்காக வைத்தியசாலைக்கு வருவோர் எவ்வித அச்சத்தையும் ஏற்படுத்தி கொள்ள தேவையில்லை என அவர் தொடர்ந்தும் தெரிவித்தார்.