2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைகளை 2021 ஆம் ஆண்டு ஜனவரியில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, சாதாரண தரப்பரீட்சை 2021ஆம் ஆண்டு ஜனவரி 18 முதல் 28ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சைகள் முடிவடைந்தன.