கண்டி போகம்பர சிறைச்சாலையில் 7 கைதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.குறித்த கைதிகளை வெலிகந்த கொவிட் சிகிச்சை மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை போகம்பர பழைய சிறைச்சாலையை தனிமைப்படுத்தல் மத்திய நிலையமாக மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறைச்சாலையில் சிறைச்சாலை தொற்றாளர்களுடன் நெருங்கி பழகிய கைதிகளை தனிமைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, வெலிகடை சிறைச்சாலையில் இதுவரை 29 கைதிகளுக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் வெலிகந்த கொவிட் சிகிச்சை மத்திய நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.