நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டுள்ளவர்களுக்கான மருந்துகளை அவர்களது வீடுகளுக்கே சென்று விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.நாடளாவிய ரீதியில் இதற்கான நடவடிக்கைகளை இன்று முதல் மீள ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மாத்திரம் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த விடயம் தொடர்பில் தொற்று நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தௌிவுபடுத்தியுள்ளார்.