கொரோனா வைரஸ் தொற்றினால் 30ஆவது மரணம் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை அரசாங்க தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் கொழும்பு முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் எனவும் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.

கொழும்பு ஐ.டி.எச்.யில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

நீரிழிவு நோயுடன், கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டமை காரணமாக இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.