13 மாவட்டங்களில் நேற்று (08) கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனரென, கொவிட்-19 வைரஸை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. தொற்றாளர்களில் பெரும்பாலானவர்கள் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இதற்கமைய, நேற்று (08) கொழும்பு மாவட்டத்தில் 213 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 143 பேர் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் 183 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 12 பேரும், காலியில் 09 பேரும், களுத்துறையில் 06 பேரும் , கேகாலையில் நால்வரும், கண்டியில் மூவரும், நுவரெலியாவில் இருவரும், பதுளை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என்ற அடிப்படையிலும் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.