கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கையை தொலைக்காட்சி, வானொலி உள்ளிட்ட ஊடகங்களின் வாயிலான முன்னெடுக்கும் நடவடிக்கை எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதுடன், அரச மற்றும் தனியார் ஊடக நிறுவனங்களுடன் இதுபற்றி கலந்துரையாடியுள்ளதாக கல்வியமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, இந்த பாடத்திட்டங்கள் மூன்று மொழிகளிலும் கற்பிக்கப்படவுள்ளன.

கற்றல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் முறைமை தொடர்பிலான தகவல்கள் கல்வியமைச்சினால் அறிவிக்கப்படும்.