COVID-19 தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகளை மாவட்ட செயலகங்கள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

வாகன உரிமை மாற்றம் உள்ளிட்ட பிரதான அலுவலகத்தினூடாக வழங்கப்படும் சேவைகளை யாழ்ப்பாணம், அனுராதபுரம், குருநாகல், கம்பஹா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலகங்களில் பெற்றுக்கொள்ள முடியுமென அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், நாளை முதல் இந்த சேவைகளை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியுமென மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், பொதுமக்கள் காலை 09 மணி தொடக்கம் பிற்பகல் 04 மணி வரையான காலப்பகுதியில் அழைப்பினை ஏற்படுத்தி தமக்கான திகதியையும் நேரத்தையும் ஒதுக்கிக்கொள்ள வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

  • யாழ். மாவட்ட செயலகத்திற்கான தொலைபேசி இலக்கங்கள் – 070 635 4155, 070 635 4156
  • ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலகத்திற்கான தொலைபேசி இலக்கங்கள் – 070 635 4151, 070 635 4152
  • அனுராதபுரம் மாவட்ட செயலகத்திற்கான தொலைபேசி இலக்கங்கள் – 070 635 4153, 070 635 4154
  • கம்பஹா மாவட்ட செயலகத்திற்கான தொலைபேசி இலக்கங்கள் – 070 635 4159, 070 635 4160

இதேவேளை, சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் சேவைகளை, மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களைக் கொண்டு நாளை (11) முதல் வேரஹெர அலுவலகத்தினூடாக முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்படாத மற்றும் அபாய பகுதிகளை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் வசிப்போருக்காக மாத்திரம் இந்த சேவைகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.