இலங்கையில், தொழில் செய்யும் சீன அதிகாரிகள் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதியானது.கொழும்பு துறைமுக நகரத்தில் கடமையாற்றுவோரில் 47 பேருக்கு கொ​ரோனா வைரஸ் தொற்று உறுதியானது. அதில், சீன அதிகாரிகள் நால்வர் அடங்குகின்றனர்.

இதேவேளை, காலி முகத்திடலுக்கு எதிராக, கோல் பேஸ் கிரினில் கடமையாற்றும் உள்ளூர் தொழிலாளர்களில் 50 பேர், பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அங்கு பணியாற்றும் சுமார் 200 பேர், இரத்மலானையில் தங்கியிருக்கின்றனர். அந்த இடமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.