கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கு அவசர நோய் நிலைமைகளின் போது நோயாளர் காவு வண்டிகளை பெற்றுக் கொள்வதற்கு தொலைப்பேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

” விசேடமாக முடக்கப்பட்ட பிரதேசங்களில் அவசர தேவைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தைகளுக்கு சுகயீனம் ஏற்படக்கூடும். கர்ப்பிணி பெண்களாக இருக்கக்கூடும். கொவிட் அல்லாத நோய். கொவிட் என்றால் பரவாயில்லை. அவ்வாறான சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கு விசேட தொலைப் பேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 0113422558 என்ற இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இலக்கத்திற்கு அழைத்தால் கொழும்பை அண்டியுள்ள நபர்களுக்கு நோயாளர் காவு வண்டியினை அவசர தேவைகளுக்கு பெற்றுக் கொள்ளலாம். ஏனைய மாகாணங்களை சேர்ந்தவர்களும் இந்த தொலைப்பேசி இலக்கத்திற்கு அழைத்து சேவையை பெற்றுக் கொள்ள முடியும்”.