மேல் மாகாணத்திலிருந்து வௌியேறும் மற்றும் மேல் மாகாணத்துக்குள் பிரவேசிக்கும் அனைத்து பஸ் சேவைகளும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த சேவைகள, எதிர்வரும் 15 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை இடைநிறுத்தப்படுவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இன்று (11) இரவு 10 மணி தொடக்கம் எதிர்வரும் 15ஆம் திகதி வரை ரயில்கள் மேல்மாகாணத்தில் இருந்து வெளியேறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.