கொழும்பில் 30,000 கொரோனா தொற்றாளர்கள் இருக்கலாம் என, கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி  வைத்தியர் ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.கொழும்பில் எதேச்சையாக 400 பேருக்கு பிசிஆர் செய்யப்பட்ட போது, 19 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, இது   5 சதவீதத்தைக் காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் அன்றாட செயற்பாடுகளில் ஈடுபடும்  மக்கள் தொகை செறிவில் 30,000 தொற்றாளர்கள் சுற்றிதிரியலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே இதனை கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.