இலங்கையில் கொவிட் 19 தொற்றினால், வயோதிபர்களும் நடுத்தர வயதைச் சேர்ந்தோருமே அதிகளவில் உயிரிழந்து வருகின்றனரென, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.இதற்கமைய, 40-50 வயதுக்குட்பட்ட பலர் கடந்த சில தினங்களாக கொவிட் தொற்றால் ஏற்பட்ட மாரடைப்பினால் உயிரிழந்துள்ளனர் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், வீட்டில் இருந்த நிலையில் உயிரிழந்த பலர், தொற்றா நோய்களால் பீடிக்கப்பட்டிருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.