சிறைகளில் கொரோனா தொற்று பரவி வருவதை கருத்திற்கொண்டு, சிறைச்சாலைகளின் அதிகாரிகள், சிறைச்சாலைகளிலிருந்து 2 வாரங்களுக்கு வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, வெலிகட, வெலிகட பெண்கள் சிறை, கொழும்பு சிறைச்சாலை, மெகசின் ஆகிய சிறைச்சாலைகளின் அதிகாரிகளுக்கே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வெலிகட சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்ற கைதியொருவர், கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளாரென்றும் இனிவரும் நாள்களில் கொரோனா தொற்றக்குள்ளாகும் கைதிகளை கந்தகாடு அல்லது கல்லேல்ல சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.