தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி மேல் மாகாணத்தில் இருந்து வௌியேறும் நபர்களை தேடுவதற்காக விசேட நடைமுறையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரை ஈடுபடுத்தி இந்த செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அதன்படி, நபரொருவர் தனிமைப்படுத்தல் காலப்பகுதியினுள் மேல் மாகாணத்தில் இருந்து வௌியேறியிருந்தால் அவர் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

கொவிட் பரவல் அவதான நிலைமை காரணமாக கடந்த 11 ஆம் திகதி முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி நள்ளிரவு வரை மேல் மாகாணத்தில் இருந்து வௌியேறுவது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது