கொரோனா தொற்றால் இலங்கையில் இணைய பாவனை அதிகரித்துள்ளதென, இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இதனால் தரவு (data) பாவனை 25 தொடக்கம் 30 சதவீதமாக அதிகரித்துள்ளதாக, இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓசத சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

எனவே சாதாரண விலைக்கு இணைய அணுகலுக்கான வாய்ப்பளித்தமை நாடு என்ற ரீதியில் பெற்றுக்கொள்ளப்பட்ட  வெற்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.