நேற்று நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்ட 392 தொற்றாளர்களுள் 205 பேர் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி தொடக்கம் நேற்று வரை கொழும்பில் மொத்தமாக 5,127 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனரெனகொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கம்பஹாவில் நேற்று 40 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் களுத்துறை-14, இரத்தினபுரி-4, காலி-3, கேகாலை-09, மாத்தளை-1, குருநாகல்-2, அநுராதபுரம்-4,கண்டி-3,அம்பாறை-1, மாத்தறை-1, திருகோணமலை1, மட்டக்களப்பு-1, யாழ்ப்பாணம்-2 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.