வடமராட்சி கிழக்கு தம்பலகாமம் ஆற்றுப்பாதையில் வெட்டுக்காயங்களுடன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பளை பொலிஸார் தெரிவித்தனர்.இந்தக் கொடூரச் சம்பவம் இன்று (15) பிற்பகல் 2.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் செம்பியன்பற்று மாமுனையைச் சேர்ந்த தனபாலசிங்கம் குணசிங்கம் (வயது -43) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கொல்லப்பட்டவர் மீது தாக்குதல் நடத்தியவர் அல்லது நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.