களுத்துறை மாவட்டத்தில் 803 தொற்றாளர்கள் இதுவரை இனங்காணப்பட்டுள்ளனரென, களுத்துறை பிரதேச சுகாதாரச் சேவை பணிப்பாளர் உதய ரத்நாயக்க தெரிவித்;துள்ளார்.மேற்படி தொற்றாளர்களிடையே 18 பேர் கர்ப்பிணிகள் என்பதுடன், 9 பேர் பல்வேறு நோய்களால் பீடிக்கப்பட்டுள்ளவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

803 தொற்றாளர்களிடையே 121 பேர் ஹொரணை பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய ஏனைய பகுதிகளைவிட ஹொரணை பகுதியிலேயே அதிகளவு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனரென, அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், களுத்துறை மாவட்டத்தில்; அகவலவத்தை பகுதியில் 23 பேரும், பண்டாரகம பகுதியில் 70 பேரும், புளத்சிங்கள பகுதியில் 41 பேரும், தொடங்கொட பகுதியில் 04 பேரும், பேருவளை பகுதியில் 77 பேரும், இங்கிரிய பகுதியில்  90 பேரும், களுத்துறை பகுதியில் 57 பேரும், மதுராவல பகுதியில்  51 பேரும், மதுகம பகுதியில் 67 பேரும், மில்லனிய பகுதியில்  37 பேரும், பாலிந்தநுவர பகுதியில் 11 பேரும், பாணந்துறை பகுதியில் 69 பேரும், வாத்துவ பகுதியில் 63 பேரும், வலல்லாவிட பகுதியில் 22 பேரும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.