தனது சொந்த செலவில், காடழிப்பு செய்யப்பட்டுள்ள கல்லாறு வனப்பகுதியை மீண்டும் செழிப்புறச் செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு உத்தரவிட்டுள்ளது.வில்பத்து சரணாலயத்திற்கு அருகில் அமைந்துள்ள கல்லாறு வனப்பகுதியில் காடழிப்பு செய்தமை தொடர்பிலான வழக்கின் தீர்ப்பினை வழங்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை விடுத்துள்ளது.

குறித்த வழக்கின் தீர்ப்பை அறிவித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் குறித்த வனப்பகுதியில் காடழிப்பு மேற்கொண்டமை சட்டவிரோதமானது என தெரிவித்துள்ளது.