பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் நாளை (18) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ள இந்த கலந்துரையாடலில் எதிர்வரும் 23 ஆம் திகதி பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பிலான இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

இதன்போது, கொவிட் செயலணியின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பாடசாலைகள் மூடப்பட்டுள்ள காலப்பகுதியில் மாணவர்களுக்கு Online மூலமாக கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.